டாக்டர் கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கம் பாராட்டு

தினமலர்  தினமலர்
டாக்டர் கமல்ஹாசனுக்கு நடிகர் சங்கம் பாராட்டு

ஒடிசா பல்கலைக்கழகம் சமீபத்தில் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக நடிகர் சங்கம், கமல்ஹாசனுக்கு பாராட்டு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

கமல்ஹாசன் இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷண் மற்றும் பிரான்ஸ் அரசின் செவாலியே விருது உள்ளிட்ட பல்வேறு உயர் விருதுகளை பெற்றுள்ளார். இப்பொழுது அவருக்கு, திரைப்படத்துறையில் அவரின் கலைச்சேவையை பாராட்டி ஒடிசா மாநிலம் செஞ்சுரியன் தொழில்நுட்ப மேலாண்மை பல்கலை கழகத்தின் சார்பில் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், டாக்டர் பட்டம் வழங்கி கவுரவப்படுத்தியுள்ளார்.

இதற்காக தென்னிந்திய நடிகர் சங்கம், கமலுக்கு வாழ்த்துக்களையும் பாரட்டையும் தெரிவிக்கிறது. திரையுலகில் நடிப்பிற்கு உதாரணமாக திகழும் அவருக்கு இந்த பட்டம் அளித்தது, தமிழ் நாட்டிற்கும், தமிழ் கலைஞர்களுக்கும் பெருமை. செஞ்சுரியன் பல்கலை கழகத்திற்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றியை தெரிவித்து கொள்கிறது என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை