மஹாராஷ்டிர அரசியல் சிக்கலுக்கு இன்று தீர்வு: உத்தவ் முதல்வர் ?

தினமலர்  தினமலர்
மஹாராஷ்டிர அரசியல் சிக்கலுக்கு இன்று தீர்வு: உத்தவ் முதல்வர் ?

மும்பை: மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற பா.ஜ., வால் ஆட்சி அமைக்க முடியவில்லை. கூட்டணி கட்சியாக இருந்த சிவசேனாவின் திடீர் பிடிவாதம் காரணமாக, பா.ஜ., தலைவர்கள், ஆட்சி அமைக்கும் முடிவை கைவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, சிவசேனாவுக்கு கவர்னர் அழைப்பு விடுத்தும், போதிய எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கடிதங்களை பெற முடியாததால், அவர்களாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதையடுத்து, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் சிவசேனா தலைமையில் ஆட்சி அமைப்பது குறித்து, தேசியவாத காங்., மற்றும் காங்., கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து பேச்சு நடத்தி வந்தனர்..இதையடுத்து மஹாராஷ்டிரா அரசியல் விவகாரம் தொடர்பாக, டில்லியில், காங்., செயற்குழு தீவிர ஆலோசனை நடத்தி கொள்கை ரீதியாக சிவசேனா வேறுபட்டு இருந்தாலும், பொது எதிரியான பா.ஜ.,வை வீழ்த்த, அந்த கட்சிக்கு ஆதரவு அளிக்கலாம் என, முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை, காங்கிரஸ் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது தொடர்பாக நள்ளிரவில் தேசிய வாத காங். தலைவர் சரத்பவார் இல்லத்திற்கு சிவசேனா கட்சியை உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே, சஞ்சய் ராவத் உள்ளிட்டோரும் ஆலோசனை நடத்தினர். இன்று ஆட்சி அமைப்பது குறித்தும் உத்தவ் தாக்கரே முதல்வராக தேர்வு செய்வதற்கான அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகலாம் என தெரிகிறது.

மூலக்கதை