அரசுத்துறைகளில் மோசடியை கண்டறிய புதிய தொழில்நுட்பம்: பிரதமர் வலியுறுத்தல்

தினகரன்  தினகரன்
அரசுத்துறைகளில் மோசடியை கண்டறிய புதிய தொழில்நுட்பம்: பிரதமர் வலியுறுத்தல்

புதுடெல்லி: அரசு துறைகளில் மோசடியை கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்ப வழிகளை கண்டறிய வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார்.மத்திய கணக்கு தணிக்கை குழு (சிஏஜி) கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:  இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலராக உயர்த்த வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். இந்த தருணத்தில், அரசு அலுவலகங்களில் நடைபெறும் மோசடிகள், ஊழல்களை கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். இதற்கென புதிய தொழில் நுட்பத்தை கண்டறிய வேண்டும். இதற்கான முயற்சியில் சிஏஜி கணக்காயர்கள் தீவிரம் காட்ட வேண்டும். அரசு நிர்வாகம் மற்றும் அதன் திறனை மேம்படுத்துவதில் ஆடிட்டர்களுக்கு மிக முக்கிய பங்கு உள்ளது. 2022ம் ஆண்டுக்குள், ஆதாரங்கள் அடிப்படையிலான கொள்கையை உருவாக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. எனவே, தரவுகளை ஆய்வு செய்வதில் சிஏஜி தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றார்.

மூலக்கதை