லாவோசில் பூகம்பம்

தினகரன்  தினகரன்
லாவோசில் பூகம்பம்

பாங்காங்:  லாவோஸ் நாட்டில் நேற்று காலை பூகம்பம் ஏற்பட்டது. இது, ரிக்டர் அளவுகோளில் 6.1 புள்ளிகளாக பதிவானது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான லாவோஸ் நாட்டில், தாய்லாந்து எல்லை அருகே நேற்று காலை 6.50 மணிக்கு திடீரென பூகம்பம் ஏற்பட்டது.  இதனால், பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினார்கள். பல இடங்களில் கட்டிடங்கள், வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. பூகம்பத்தால்  ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடி தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. இதேபோல், வியட்நாம் தலைநகர் ஹனாயிலும் பூகம்பம் உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதை மக்கள் உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர். இந்த  பூகம்பத்தின் பாதிப்பு, 700 கிமீ தொலைவுள்ள தாய்லாந்து தலைநகர் பாங்காங்கிலும் உணரப்பட்டது. இங்குதான் 4 நாள் சுற்றுப்பயணமாக போப்  பிரான்சிஸ் நேற்று முன்தினம் வந்தார். நேற்று மாலை அவர் கூட்டம் ஒன்றில் பங்கேற்க திட்டமிட்டு இருந்தார். லாவோசில் நேற்று ஏற்பட்ட பூகம்பம்,  ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவானது.

மூலக்கதை