பெண்கள் டி20 வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா: வேதா வேகத்தில் கடைசிப் போட்டியில் வெற்றி

தினகரன்  தினகரன்
பெண்கள் டி20 வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா: வேதா வேகத்தில் கடைசிப் போட்டியில் வெற்றி

புராவிடன்ஸ்: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்ெகாண்டுள்ள இந்தியா டி20 தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் 5-0 என்ற கணக்கில் வெ.இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது.இந்திய பெண்கள் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அங்கு நடைபெற்ற 3 ேபாட்டிகள் கொண்ட ஒரு நாள்  தொடரை மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி 2-1 கணக்கில்  கைப்பற்றியது.இந்தியா தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் 4 ஆட்டங்களையும் 84ரன், 10விக்கெட், 7 விக்கெட், 5ரன் வித்தியாசத்தில் வென்றதுடன் தொடரையும் கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் கடைசி டி20 போட்டி புராவிடன்ஸ் நகரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய  தொடக்க ஆட்டக்காரர்கள் ஷபாலி வர்மா 9,  கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 7 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். ஆனால் அடுத்து இறங்கிய  ஜெமீமா ரோட்ரிக்ஸ், தமிழக வீராங்கனை வேதா கிருஷ்ணமூர்த்தி இணை  அதிரடியாக விளையாடி 3வது விக்கெட்டுக்கு 117 ரன் சேர்த்தது. அதனால் இந்தியா 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்தது. ஜெமீமா 50 ரன்னும்,  வேதா  ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில்57 ரன் எடுத்தனர்.  வெஸ்ட் இண்டீசின் ஹேலே மாத்யூஸ், அனிசா முகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழத்தினர்.அடுத்து 135 ரன் எடுத்தால் ஆறுதல் வெற்றி என்ற இலக்குடன் வெ.இண்டீஸ் களம் கண்டது. ஆனால் இந்திய வீராங்கனைகள் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அணியில் கிஷோனா நைட் 22, ஷெமைன் கேம்பெல் 19 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கை தாண்டினர். மற்றவர்கள்  ஒற்றை இலக்கை தாண்டவில்லை.  இந்திய தரப்பில் அனுஜா பாடீல் 2, ராதா யாதவ், பூனம் யாதவ், பூனா வஸ்ட்ரகர், ஹர்லீன் தியோல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்,எனவே வெ.இண்டீஸ்  20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 73 ரன் மட்டுமே எடுத்தது. அதனால் இந்தியா 5வது போட்டியில் 61 ரன் வித்தியாசத்தில் வென்றது. இந்தியா அனைத்து போட்டிகளையும் வென்று 5-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வெஸ்ட் இண்டீசை ஒயிட்வாஷ் செய்தது.

மூலக்கதை