மிகப்பெரும் ஊழல் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர்

தினமலர்  தினமலர்
மிகப்பெரும் ஊழல் குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர்

ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹூ மீது ஊழல், நம்பிக்கை துரோகம், மோசடி வழக்குகள் பதியப்பட்டன. இதனால் அவரது அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

இஸ்ரேல் பிரதமராக உள்ள பெஞ்சமின் நேதான்யாஹூ மீது பில்லினியர் நண்பர்களிடமிருந்து லட்சக்கணக்கான பவுண்ட் ஆடம்பர பொருட்களை பரிசாக பெற்றது, அந்நாட்டு ஊடகங்களில் தனக்கு சாதகமாக செய்தி ஒளிபரப்பு செய்ய வர்த்தக உதவி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த 3 பெரிய ஊழல்கள் குறித்து அவரிடம் நேற்று(நவ.,21) விசாரணை நடைபெற்றது.


இந்த வழக்குகளால் அவரது அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால் தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும், பெஞ்சமின் நேதான்யாஹூ மறுத்துள்ளார். பதவியில் உள்ள இஸ்ரேல் பிரதமர் மீது மிகப்பெரிய ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை