அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு

தினகரன்  தினகரன்
அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு எதிரான வழக்கில் நாளை தீர்ப்பு

சென்னை: அரசு புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு எதிரான வழக்கில் நாளை நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. அரசாணைக்கு எதிராக ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது. அரசு புறம்போக்கு, கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் வகையில் ஆகஸ்டில் அரசாணை வெளியிடப்பட்டது. புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசாணை இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மூலக்கதை