புதிய கல்விக்கொள்கை அல்ல; மாநில அரசுகளின் உரிமைகளை தரைமட்டமாக்கும் புல்டோசர் கல்விக்கொள்கை: மாநிலங்களவையில் வைகோ கடும் தாக்கு

தினகரன்  தினகரன்
புதிய கல்விக்கொள்கை அல்ல; மாநில அரசுகளின் உரிமைகளை தரைமட்டமாக்கும் புல்டோசர் கல்விக்கொள்கை: மாநிலங்களவையில் வைகோ கடும் தாக்கு

டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ளது புதிய கல்விக்கொள்கை அல்ல; மாநில அரசுகளின் உரிமைகளை தரைமட்டமாக்கும் புல்டோசர் கல்விக்கொள்கை என மாநிலங்களவையில் வைகோ குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டலை அடுத்து கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு மத்திய அரசின் கல்விக் கொள்கை தொடர்பான ‘புதிய தேசியக் கல்விக் கொள்கை வரைவு இந்தாண்டு அண்மையில் வெளியிட்டது. இந்த கல்விக் கொள்கை வரைவு இந்தியை திணிக்கும் நோக்கத்தில் உள்ளதாகவும், ஏழை மாணவர்களின் கல்வியை பறிக்கும் செயலாக உள்ளது எனவும் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள், மாணவர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இன்று மாநிலங்களவை கேள்வி நேரத்தின் போது புதிய கல்விக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது குறுக்கிட்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது இது புதிய கல்விக் கொள்கை அல்ல, மாநில அரசுகளின் உரிமைகளைத் தகர்த்துத் தரைமட்டமாக்குகின்ற புதிய புல்டோசர் கொள்கை என குற்றம் சாடினார். நாட்டிற்கு நாசம் விளைவிக்கும் இந்தப் புதிய கல்விக் கொள்கை குறித்து அனைத்து மாநில அரசுகளோடும் விரிவான விவாதம் நடத்தினீர்களா? மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்றீர்களா? இல்லை. அப்படிப் பெற்றிருந்தால் எந்தெந்த மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன என அறிந்துகொள்ள விரும்புகின்றேன்\'\' எனக் கேள்வி எழுப்பினார்.

மூலக்கதை