உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீராங்களை மனுபக்கர் தங்கம் வென்று அசத்தல் : ஜூனியர் பிரிவில் உலக சாதனையையும் முறியடித்தார்

தினகரன்  தினகரன்
உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீராங்களை மனுபக்கர் தங்கம் வென்று அசத்தல் : ஜூனியர் பிரிவில் உலக சாதனையையும் முறியடித்தார்

பெய்ஜிங் : சீனாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீராங்களை மனுபக்கர் தங்கம் வென்று அசத்தியுள்ளார். சீனாவில்  ஐஎஸ்.எஸ்.எஃப் சார்பில் உலகக்கோபபை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த 17ம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் வரும் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் புடியான் நகரில் உலகக்கோபபை துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் பெண்களுக்கான 10.மீ ஏர்பிஸ்டல் பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை மனுபக்கர் (வயது 17) 244.7 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். அத்துடன் ஜூனியர் பிரிவில் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார். இந்த ஆண்டின் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும். இதன் மூலம் இந்தியா ஒரு தங்கம் பெற்று அட்டவணையில் 3வது இடத்தில் உள்ளது.இதனிடையே 10.மீ ஏர்பிஸ்டல் பிரிவில் 241.9 புள்ளிகள் பெற்று செர்பிய வீராங்கனை அருணோவிக் சோரனா வெள்ளிப்பதக்கமும், 221.8 புள்ளிகள் பெற்று சீனாவின் வாங் கியான் வெண்கலப் பதக்கமும் வென்றனர். இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற மற்றொரு இந்திய வீராங்கனை யாஷாஸ்வினி தேஸ்வால் 158.8 புள்ளிகள் பெற்று 6-ம் இடத்தைப் பிடித்தார். இந்த ஆண்டு நடந்து முடிந்த ஜூனியர் ஒலிம்பிக் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் மனு பாக்கர் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த தொடர் வெற்றிகளின் மூலம், டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதையும் மனு பாக்கர் உறுதி செய்துள்ளார்.

மூலக்கதை