உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம்

தினகரன்  தினகரன்
உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம்

பெய்ஜிங் : சீனாவில் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்றார். 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்று இளவேனில் வாலறிவன் அசத்தியுள்ளார். மனு பக்கர் சாதனை சீனாவில் 2019 ஐஎஸ்.எஸ்.எஃப் உலகக்கோபபை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. கடந்த 17ம் தேதி தொடங்கிய இப்போட்டிகள் வரும் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. புடியான் நகரில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் இறுதிச்சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.இன்று அதிகாலை நடந்த மகளிருக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மனு பக்கர் (17) பங்கேற்றார். இதில் சுற்றுகளில் குறி தவறாமல் சுட்டு, 244.7 புள்ளிகளை அள்ளிய அவர், இறுதியில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் அவர் ஜூனியர் பிரிவில் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளார். தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் இந்நிலையில் தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இளவேனில் வாலறிவன் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 250.8 புள்ளிகள் எடுத்து இந்த தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். இதனிடையே 10.மீ ஏர்பிஸ்டல் பிரிவில் 250.7 புள்ளிகள் பெற்று சீன வீராங்கனை லின் யிங்-ஷின் வெள்ளிப்பதக்கமும், 229 புள்ளிகள் பெற்று ருமேனியாவின் லாரா-ஜார்ஜெட்டா கோமன் வெண்கலப் பதக்கமும் வென்றனர். இந்த ஆண்டு பிரேசிலில் நடந்து முடிந்த உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை