மாவோயிஸ்ட்களுக்கு தீவிரவாதிகள் உதவுகிறார்கள்: கேரள மார்க்சிஸ்ட் பிரமுகர் பேச்சு

தினகரன்  தினகரன்
மாவோயிஸ்ட்களுக்கு தீவிரவாதிகள் உதவுகிறார்கள்: கேரள மார்க்சிஸ்ட் பிரமுகர் பேச்சு

திருவனந்தபுரம்: கேரளா உள்பட தென் மாநிலங்களில் மாவோயிஸ்ட்களுக்கு தீவிரவாதிகள் அனைத்து உதவிகளையும் செய்கின்றனர் என்று ேகாழிக்கோடு மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநில வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. இதையடுத்து தென்மாநில போலீசார் வனப்பகுதிகளில் தீவிர ேசாதனை நடத்தி வருகின்றனர். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பாலக்காடு அருகே அட்டப்பாடி மஞ்சக்கண்டி வனப்பகுதியில் தண்டர்போல்ட் அதிரடிப்படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் தமிழகத்தை சேர்ந்த கார்த்தி, மணிவாசகம் உள்பட 4 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் கோழிக்கோட்டை சேர்ந்த மார்க்சிஸ்ட் தொண்டர்களான அலன்சுகைப் மற்றும் தாகாபஷல் ஆகிய 2 மாணவர்களை ேபாலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவர்கள் இருவருக்கும் மாவோயிஸ்ட் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக போலீசார் கூறினர். மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி மார்க்சிஸ்ட் தொண்டர்கள் கைது செய்யப்பட்டது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மார்க்சிஸ்ட் கட்சியில் தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகரித்து வருவது இதன்மூலம் நிரூபணமாகி உள்ளது என்று பாஜ குற்றம் சாட்டியது. இதற்கிடையே கோழிக்கோடு மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளர் மோகனன் நேற்று முன்தினம் கட்சி கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியது: கேரளா உள்பட சில மாநிலங்களில் மாவோயிஸ்டுகளுக்கு கோழிக்கோட்டில் செயல்பட்டு வரும் சில தீவிரவாத அமைப்புகள் எல்லா உதவிகளும் செய்து வருகின்றன. மாவோயிஸ்டுகளுக்கு பயிற்சி உள்ளிட்ட உதவிகளையும் இந்த அமைப்புகள் செய்கின்றன. இவ்வாறு அவர் பேசினார். மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளரின் இந்த பேச்சு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அவர் கூறியதில் எந்த உண்மையும் இல்லை என்று கட்சியின் அகில இந்திய செயலாளர் சீதாராம் யெச்சூரி, பொலிட்பீரோ உறுப்பினர் ராமச்சந்திரன்பிள்ளை மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மறுப்பு ெதரிவித்துள்ளனர். ஆனால் பாஜ அதை வரவேற்று உள்ளது. இதுகுறித்து பாஜ முன்னாள் கேரள மாநில தலைவர் கும்மனம் ராஜசேகரன் கூறுகையில், மத தீவிரவாதிகள், மாவோயிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் அடிப்படைவாதிகள் ஆகியோர் ஒன்றுக்ெகான்று தொடர்பு உடையவர்கள். இது தொடர்பாக போலீஸ் உரிய விசாரணை நடத்த வேண்டும். இப்போதாவது மார்க்சிஸ்ட் இதை ஒப்புக்கொண்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

மூலக்கதை