ஏ டிவிஷன் ஹாக்கி அஞ்சல் துறை கோல் மழை

தினகரன்  தினகரன்
ஏ டிவிஷன் ஹாக்கி அஞ்சல் துறை கோல் மழை

சென்னை: ஏ டிவிஷன் ஹாக்கி போட்டித் தொடரில் அஞ்சல் துறை அணி கோல் மழை பொழிந்து இக்பால் அணியை மிக எளிதாக வீழ்த்தியது.  எழும்பூர் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் அஞ்சல் துறை - இக்பால் மனமகிழ் மன்றம் மோதின. ஒருங்கிணைந்து தாக்குதல் நடத்திய அஞ்சல்துறை அணி வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். முதல் பாதியில் 7 - 0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்த அந்த அணி, 2வது பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்தது. ஆட்டநேர முடிவில் அஞ்சல்துறை 17-0 என்ற கோல் கணக்கில் இக்பால் மனமகிழ் மன்றத்தை வீழ்த்தியது. தினேஷ்குமார் 6, நந்தகுமார் 3, மணிகண்டன், செந்தில் தலா 2, ஆல்பர்ட் ஜான், பிரேம்குமார், கமலக்கண்ணன், சுதர்சன் தலா ஒரு கோல் அடித்தனர்.    மற்றொரு லீக் போட்டியில் சேத்துப்பட்டு யங்ஸ்டர்ஸ் - யுனிவர்சல் ஹாக்கி கிளப் மோதிய போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இன்னொரு லீக் போட்டியில் எஸ்டிஏடி 11-0 என்ற கோல் கணக்கில் தி இந்து அணியை வீழ்த்தியது.

மூலக்கதை