சபரிமலை கோயிலை நிர்வகிக்க தனி சட்டம் இயற்ற வேண்டும்: கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
சபரிமலை கோயிலை நிர்வகிக்க தனி சட்டம் இயற்ற வேண்டும்: கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சபரிமலை கோயிலை நிர்வகிக்க கேரள அரசு தனி சட்டத்தை உருவாக்கி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சபரிமலை கோயில் நிர்வாகம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு, நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக இது தொடர்பான வழக்கு கடந்த ஆகஸ்டில் விசாரணைக்கு வந்தபோது சபரிமலை கோயிலை நிர்வகிக்க தனி சட்டம் இயற்றுவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக கேரள அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதையடுத்து நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் கேரள அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தற்போது சபரிமலை ஐயப்பன் கோயில் திருவாங்கூர் தேவசம் போர்டு நிர்வகித்து வருவதாகவும், கோயில் நிர்வாகம் தொடர்பான வரைவு மசோதாவில் கோயில் ஆலோசனை குழுவில் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் உறுப்பினர்களாக இடம் பெறும் வகையில் புதிய விதிமுறை பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நீதிபதிகள் வழங்கிய உத்தரவில், ‘‘சபரிமலை கோயில் நிர்வாகம் தொடர்பாக தனி சட்டத்தை கேரள அரசு உருவாக்கி ஜனவரியில் சமர்ப்பிக்க வேண்டும்’ என்றனர்

மூலக்கதை