பாதுகாப்பு தொழிற்சாலை ஹாக்கி தென் மண்டலம் அசத்தல்

தினகரன்  தினகரன்
பாதுகாப்பு தொழிற்சாலை ஹாக்கி தென் மண்டலம் அசத்தல்

சென்னை: பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளுக்கு இடையிலான அகில இந்திய மண்டல ஹாக்கி  போட்டியில், தென் மண்டலம் அபார வெற்றி பெற்றது.  பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும்   தொழிற்சாலைகளுக்கு இடையிலான அகில இந்திய 37வது மண்டல ஹாக்கி தொடர் சென்னையில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் தென் மண்டலம் - வடக்கு மண்டலம் மோதின. இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய தென்மண்டல அணி 6-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. ஜெகன் 3, சுரேஷ்குமார் 2, விஜயகுமார் ஒரு கோல் அடித்தனர்.  மத்திய மண்டலம் - மேற்கு மண்டலம் இடையிலான போட்டியில், மத்திய மண்டலம் 7-0 என்ற கோல் கணக்கில் எளிதாக வென்றது. அந்த அணியின் பிரசாத் 2, சங்கீஸ் டங் டங், அமோல் பாரா, நபின் ஹென்ரஞ்ச், ராஜேஷ் தாபா, பாகில் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த தொடர் நாளை நிறைவடைகிறது.

மூலக்கதை