முதுநிலை ஆசிரியர் பணி தேர்வு பட்டியல் வெளியீடு

தினகரன்  தினகரன்
முதுநிலை ஆசிரியர் பணி தேர்வு பட்டியல் வெளியீடு

சென்னை: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்காக தேர்வானவர்களின்  விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய  தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2018-2019ம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1  ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள 2144 காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு  வெளியிடப்பட்டு கடந்த  செப்டம்பர் 27,28, 29ம் தேதிகளில்   கணினி வழித்தேர்வு நடைபெற்றது. காலிப்பணியிட எண்ணிக்கையின் அடிப்படையில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 1:2 என்ற விகிதத்தில் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் இன சுழற்சி அடிப்படையில்  கடந்த 8,9ம் தேதிகளில்  அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு பணி 11 மாவட்டங்களில் நடந்தது. மொத்தம் 15 பாடங்களுக்குரியவர்கள் இணையவழியில் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ளவர்களுக்கு தற்காலிக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 15  பாடங்களில் தற்போது முதற்கட்டமாக 12 பாடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மூலக்கதை