ஜப்பானின் நீண்ட கால பிரதமர்; ஷின்ஸோ அபே சாதனை

தினமலர்  தினமலர்
ஜப்பானின் நீண்ட கால பிரதமர்; ஷின்ஸோ அபே சாதனை

டோக்கியோ: ஜப்பானில் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற சாதனையை ஷின்ஸோ அபே படைத்துள்ளார்.

ஜப்பான் பிரதமராக ஷின்ஸோ அபே பொறுப்பேற்று, நேற்றுடன்(நவ.,20) 2,887 நாள்கள் நிறைவடைந்தன. இதன் மூலம் அந்த நாட்டில் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவருக்கு முன்னதாக டாரோ கட்சுரா, ஜப்பானில் மிக நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமர் என்ற பெருமையை பெற்றிருந்தார். 1901 முதல் 1913ம் ஆண்டு வரை அவர் பிரதமராக இருந்தா். அவரது சாதனையை ஷின்ஸோ அபே முறியடித்துள்ளார்.


இதுமட்டுமன்றி, ஜி7 நாடுகளில் மிக நீண்ட காலம் பிரதமர் பொறுப்பை வகித்த 2வது தலைவர் என்ற பெருமையையும் ஷின்ஸோ அபே பெற்றுள்ளார். இந்த வரிசையில், 2005 முதல் ஜெர்மன் பிரதமராக பொறுப்பு வகித்து வரும் ஏஞ்சலா மெர்கல் முதலிடத்தில் உள்ளார். ஷின்ஸோ அபேயின் தற்போதைய பதவிக்காலம் 2021ம் ஆண்டு நிறைவடைகிறது.

மூலக்கதை