சபரிமலையில் படிபூஜை முன்பதிவு ; பக்தர்கள் ஆர்வம்

தினமலர்  தினமலர்
சபரிமலையில் படிபூஜை முன்பதிவு ; பக்தர்கள் ஆர்வம்

சபரிமலை : சபரிமலையில் படிபூஜை 2036 வரை முன்பதிவு முடிந்து விட்டது. பூஜை நடத்த 17 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.சபரிமலையில் படிபூஜை நடத்துவதற்கு பக்தர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.


இதை நடத்த 75 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கான முன்பதிவு 2036-ம் ஆண்டு வரை முடிந்து விட்டதாக சபரிமலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதனால் இனிமேல் படிபூஜை செய்யும் பக்தர்கள் 17 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.படிபூஜை போல மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த பூஜை உதயாஸ்தமனபூஜை.


காலை முதல் இரவு வரை நடைபெறும் 18 வகை பூஜைதான் உதயாஸ்தமன பூஜை. காலை 7:30 மணிக்கு உஷபூஜை, மதியம் உச்சபூஜைக்கு முன்னர் 16 பூஜைகள் நிறைவு பெறும். மாலையில் நடை திறந்த பின்னர் இரண்டு பூஜைகள் நடைபெறும்.இதற்கு கட்டணம் 40 ஆயிரம் ரூபாய். இதன் முன்பதிவு 2027-ம் ஆண்டு வரை முடிந்துள்ளது.இந்த இரண்டு பூஜைகளும் பக்தர்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு மண்டல- ,மகரவிளக்கு காலத்தில் நடத்தப்படுவதில்லை.

கடந்த ஆண்டு பெருமழையில் ரத்தான படிபூஜைகள் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்றைய பூஜையின் வழிபாட்டுதாரர் வரமுடியாத நிலை ஏற்பட்டதால் நேற்று படிபூஜை நடைபெறவில்லை.

மூலக்கதை