நாளை மறுநாள் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: ‘பிங்கு - டிங்கு’ 67,000 டிக்கெட்டும் வித்தாச்சு...மண்ணின் மைந்தன் சவுரவ் கங்குலி மகிழ்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
நாளை மறுநாள் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: ‘பிங்கு  டிங்கு’ 67,000 டிக்கெட்டும் வித்தாச்சு...மண்ணின் மைந்தன் சவுரவ் கங்குலி மகிழ்ச்சி

கொல்கத்தா: இந்தியா- வங்கதேசம் இடையேயான 2வது ‘பிங்க்’ பந்து டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை மறுநாள் (நவ. 22) தொடங்குகிறது.

இதற்கான  பிரத்யேக பந்து தயாரிப்பு பணி உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரில் நடைபெற்றது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி பங்கேற்கும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

மேலும் முதல் 4 நாட்களுக்கான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் முழுமையாக விற்றுத்தீர்ந்துவிட்டது.

இதற்கிடையில் இந்தியா, வங்கதேச அணிகளின் பயிற்சியாளர்களான ரவி சாஸ்திரி, ரசல் டோமிங்கோ ஆகியோர் கொல்கத்தா ஏர்போர்ட்டில் இருந்து நேராக ஈடன் ஆடுகளத்துக்கு நேற்று வந்தனர்.

காலையில் கொல்கத்தா வந்த கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் துணைக்கேப்டன் ரஹானேவுக்கு ‘பிங்க்’ நிற டீ-சர்ட் அணிந்து ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கொல்கத்தா நகரமே மின்னொளியில் விழாக்கோலம் கொண்டுள்ளது.
இந்நிலையில், பிசிசிஐயின் தலைவரும், முன்னாள் கேப்டனும், கொல்கத்தா மண்ணின் மைந்தனுமான சவுரவ் கங்குலி நேற்று மும்பையில் கூறுகையில், ‘‘கொல்கத்தாவில் வங்கதேசத்துக்கு எதிராக நடக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டிக்கான முதல் நான்கு நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுவிட்டன.

கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் அதற்கான ஏற்பாடுகள் முடிவடைந்துள்ளது.

அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுவிட்டதால், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்’’ என்றார். டிக்கெட் விற்பதற்கான கவுன்டவுன் ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் ‘சிட்டி ஆஃப் ஜாய்’ இளஞ்சிவப்பு நிறத்துடன் தொடங்கியது.

முன்னதாக, குழந்தைகளையும்,ரசிகர்களையும் கவரும் வகையில் மைதானத்தில் வலம்வர உள்ள பிரமாண்ட பலூன் மனிதர்கள் ‘பிங்கு - டிங்கு’   நிகழ்வின் அதிகாரப்பூர்வ சின்னங்களான ‘பிங்கு-டிங்கு’ஐ கங்குலி வெளியிட்டார்.   இந்தியாவின் மிகப்பெரிய மைதானத்தில் ஒன்றான ஈடன் கார்டனில் 67,000 பேர் பார்க்கலாம். கங்குலியின் கூற்றுபடி, 67,000 டிக்கெட்டுகளும் நேற்றுடன் விற்றுத் தீர்ந்ததால் புதியதாக டிக்கெட்டுகள் வழங்கப்படவில்லை.


.

மூலக்கதை