இலவச பெட்ரோலுக்காக பிகினி அணிந்த ஆண்கள்

தினமலர்  தினமலர்
இலவச பெட்ரோலுக்காக பிகினி அணிந்த ஆண்கள்

மாஸ்கோ: ரஷ்யாவில் பிகினி உடை அணிந்து வருபவர்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கப்படும் என விளம்பரத்துக்காக பெட்ரோல் நிலையம் அறிவிக்க, ஆண்களும் பிகினி உடை அணிந்து வந்து இலவச பெட்ரோலை தங்கள் கார்களில் நிரப்பி சென்றனர்.

ரஷ்யாவிலுள்ள சமாரா நகரின் பெட்ரோல் நிலையம் ஒன்று, விளம்பரப்படுத்தும் நோக்கில் திறப்பு விழா சலுகை ஒன்றை அறிவித்தது. பெட்ரோல் நிலையம் திறந்த முதல் 3 மணி நேரத்திற்கு, பிகினி உடை அணிந்து வருபவர்களுக்கு இலவச பெட்ரோல் வழங்கப்படும் என்ற கவர்ச்சிகர திட்டத்தை அறிவித்தது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்த்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பெண்களுக்கு பதில், ஆண்கள் அதிகளவில் பிகினி அணிந்து இலவச பெட்ரோலை கார்களில் நிரப்பி சென்றனர்.


'பிகினி அணிந்த பெண்கள்' என விளம்பரத்தில் குறிப்பிடாததால், பெண்களை விட ஆண்கள் அதிகளவில் பிகினியில் குவிந்ததால், கூட்டம் அலை மோதியது. ஆண்கள் பிகினியில் இருந்த போட்டோக்கள் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாக, எதிர்பார்த்ததை விட அதிக விளம்பரம், அப்பெட்ரோல் நிலையத்திற்கு கிடைத்தது.

மூலக்கதை