காப்பீடு திட்டத்தில் 34,000 பயனாளிகள்

தினமலர்  தினமலர்
காப்பீடு திட்டத்தில் 34,000 பயனாளிகள்

சென்னை : முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில், இந்த ஆண்டு, 34 ஆயிரம் குடும்பங்களுக்கு, புதிய அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன.

தமிழகத்தில், ஏழை, எளிய மக்களுக்கு, உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தில், 1.58 கோடி குடும்பங்களுக்கு, காப்பீடு அடையாள அட்டைகள் அளிக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, இதுவரை, 5 கோடி ரூபாய்க்கு மேல், பயனாளிகள் பயன் அடைந்துள்ளனர். இந்த திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் புதிய பயனாளிகள் இணைந்து வருகின்றனர். குறிப்பாக, சென்னை மாவட்டத்தில், இந்த ஆண்டு, இதுவரை, 34 ஆயிரம் பேர், புதிதாக இணைக்கப்பட்டு, காப்பீடு அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பயன்பெறும், 1.58 கோடி குடும்பங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில், ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீடு தொகைக்கு, கட்டணமில்லாமல், சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை