குழந்தையை தூக்கி கொஞ்சும் தாய் பசுவின் உடலில் உருவான அதிசய உருவம்

தினகரன்  தினகரன்
குழந்தையை தூக்கி கொஞ்சும் தாய் பசுவின் உடலில் உருவான அதிசய உருவம்

பெலகாவி: சாதாரணமாக  கருப்பு-வெள்ளை நிறமுள்ள பசுவின் உடலில் பல்வேறு வகையான உருவங்கள்  காணப்படும். இதேபோல பசுவின் வயிற்று பகுதியில் ஒரு குழந்தையை தாய்  அணைத்துக் கொண்டு இருப்பது போன்ற வடிவம் காணப்படுகிறது. கர்நாடகாவின் சிக்கோடி தாலுகா இங்களி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராகுல்  ஜாதவ். இவர் தனது வீட்டில் பசுமாடு ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த பசுவின்  வயிற்று பகுதியின் வெளியே தாயும், குழந்தையும் இருப்பது போன்ற காட்சி  கருப்பு நிறத்தில் காணப்படுகிறது. இது அனைவரையும் வியப்பில்  மூழ்கடித்துள்ளது. இதை சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்தவர்கள் படையெடுத்து  வந்து பார்த்து செல்கிறார்கள். விவசாயி ராகுல் ஜாதவ் விவசாயத்துடன்  பால் உற்பத்தி தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு  முன்பு மகாராஷ்டிரா மாநிலம் மீரஜ்ஜில் உள்ள கால்நடை மார்க்கெட்டில் இருந்து  வெள்ளை-கருப்பு கலந்த ஜெர்ஸி பசுவை வாங்கி வந்தார். கடந்த மூன்று  ஆண்டுகளாக அந்த பசுவின் வயிற்று மீது கருப்பு நிறத்தில் வடிவம் ஒன்று  காணப்பட தொடங்கியது. பசுவின் தோலில் மற்ற இடங்களில் காணப்படுவது போன்று  இருந்ததால் ராகுல் இதை கண்டுகொள்ளவில்லை. ஆனால் சமீப காலமாக அந்த  கருப்பு நிற வடிவம் தற்போது முழுமை பெற்று பெண் ஒருவர் உட்கார்ந்த நிலையில்  குழந்தையை தூக்கி கொஞ்சுவது போன்று தெளிவாக காணப்படுகிறது.

மூலக்கதை