ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் சுட்டுக்கொலை: அதிபர் புடின் கண்டனம்

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் சுட்டுக்கொலை: அதிபர் புடின் கண்டனம்

\ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித்தலைவரும் உக்ரைன் விவகாரத்தில் அதிபர் புடினின் நடவடிக்கைகளை விமர்சித்து வந்தவருமான போரிஸ் நெம்ட்சோவ் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கிரெம்ளினில் ஒரு பாலத்தை கடக்கும்போது, கார் ஒன்றில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நெம்ட்சோவை சுட்டுக்கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நெம்ட்சோவ் படுகொலை செய்யப்பட்டதற்கு அதிபர் புடின் கண்டனம் தெரிவித்துள்ளதாகவும், இது தொடர்பான விரைவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவரது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படுகொலை குறித்து பல்வேறு கோணங்களிலும் விசாரித்து வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 55 வயது நிரம்பிய நெம்ட்சோவ் , 1990களில் போரிஸ் எல்ட்சின் அதிபராக இருந்த காலத்தில் நாட்டின் துணைப்பிரதமராக பணியாற்றிய அனுபவம் உடையவர்.

 

மூலக்கதை