அமெரிக்காவில் விற்பனைக்கு வந்த மாட்டு சாண வறட்டி

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் விற்பனைக்கு வந்த மாட்டு சாண வறட்டி

நியூஜெர்சி : அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் மாட்டு சாண வறட்டி விற்பனைக்கு வந்துள்ளது.

இந்தியாவில் பல ஆண்டுகளாக கிராமப் புறங்களில் அடுப்பு எரிப்பதற்கும், நகர் புறங்களில் மத சடங்குகளின் போதும் வறட்டி பயன்படுத்தப்பட்டு வருகிறது. விறகு அடுப்புக்களுக்கு எரிபொருளாகவும், கோயில் யாகங்கள், இந்துக்களில் இறுதிச்சடங்குகளின் போதும் வறட்டி முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வளர்ந்த வல்லரசு நாடான அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் வறட்டிவிற்பனைக்கு வந்துள்ளது. இது உலக நாடுகள் பலவற்றின் கவனத்தை ஈர்த்துள்ளது. 10 துண்டுகளை கொண்ட ஒரு வறட்டி பாக்கெட்டின் விலை 2.99 அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.215) உள்ளது. இந்த பாக்கெட்களில், "மத சடங்குகளுக்கு மட்டும்; உண்பதற்கு அல்ல" என்ற எச்சரிக்கை வாசகத்துடன் விற்பனைக்கு வந்துள்ளது.

மூலக்கதை