வங்கதேச வீரருக்கு தடை | நவம்பர் 19, 2019

தினமலர்  தினமலர்
வங்கதேச வீரருக்கு தடை | நவம்பர் 19, 2019

 தாகா: சக வீரரை தாக்கிய வங்கதேச அணி வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹொசைனுக்கு, ஐந்து ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹொசைன் 33. இவர் 38 டெஸ்ட், 51 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். சற்று கோபக்காரர் போல. கடந்த 2015ல் வீட்டில் வேலை பார்த்த 11 வயது சிறுமியை தாக்கியதாக, ஷகாதத், அவரது மனைவி இரண்டு மாதம் சிறையில் இருந்தனர்.

இதன் பின் வங்கதேச அணிக்காக தேர்வு செய்யப்படவில்லை. வழக்கில் இருந்து விடுபட்ட இவர், தனது கார் மீது மோதிய ரிக் ஷா டிரைவரை தாக்கி, சர்ச்சையில் சிக்கினார்.  தற்போது தேசிய கிரிக்கெட் லீக் தொடரில் தாகா டிவிஷன் அணிக்காக விளையாடினார். குல்னா அணிக்கு எதிரான போட்டியின் போது, பந்தை பளபளப்பு ஏற்றுவது தொடர்பாக, சக இளம் வீரர் அராபத் சன்னியை அடித்துள்ளார். இதுகுறித்து அம்பயர்கள் புகார் செய்தனர். 

இதையடுத்து ஷகாதத்துக்கு 5 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. தவறை ஒப்புக் கொண்ட இவருக்கு ரூ. 2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. வங்கதேச கிரிக்கெட் போர்டின் தொழில்நுட்ப குழு தலைவர் மின்ஹஜுல் கூறுகையில்,‘‘ஷகாதத்தின் பழைய தவறுகளை கணக்கில் கொண்டு ஐந்து ஆண்டு தடை விதிக்கப்பட்டது. கடைசி இரண்டு ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்ட தடையாக இருக்கும்,’’ என்றார். 

அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் ஷகாதத்துக்கு, விரைவில் வாழ்நாள் தடை விதிக்கப்படும் எனத் தெரிகிறது. 

மூலக்கதை