இந்தியா, பாக்., பலப்பரீட்சை * இன்று ஆசிய கோப்பை அரையிறுதி | நவம்பர் 19, 2019

தினமலர்  தினமலர்
இந்தியா, பாக்., பலப்பரீட்சை * இன்று ஆசிய கோப்பை அரையிறுதி | நவம்பர் 19, 2019

தாகா: வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை தொடரின் அரையிறுதியில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

வங்கதேசத்தில் வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை தொடர் (23 வயது) நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி ‘பி’ பிரிவில் வங்கதேசம், ஹாங்காங், நேபாள அணிகளுடன் இடம் பெற்றது.

லீக் சுற்றில் ஹாங்காங், நேபாளத்தை வென்ற இந்தியா, வங்கதேசத்திடம் தோற்க, பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தது. ‘ஏ’ பிரிவில் பாகிஸ்தான் பங்கேற்ற 3 போட்டியிலும் வெற்றி பெற்று முதலிடம் பெற்றது.

இதையடுத்து இன்று நடக்கும் முதல் அரையிறுதியில் இந்திய அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது. இத்தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களில் 2வதாக உள்ள அர்மான் ஜாபர் (184), ஷரத் (151) உள்ளிட்டோர் கைகொடுத்தால் இந்திய அணி பைனலுக்கு செல்லலாம். மற்றொரு அரையிறுதியில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மோதுகின்றன.

மூலக்கதை