தேர்வுக்குழு தலைவராகிறார் சிவராமகிருஷ்ணன் | நவம்பர் 19, 2019

தினமலர்  தினமலர்
தேர்வுக்குழு தலைவராகிறார் சிவராமகிருஷ்ணன் | நவம்பர் 19, 2019

புதுடில்லி: இந்திய அணியின் புதிய தேர்வுக்குழுத் தலைவராக தமிழகத்தின் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) ஆண்டு பொதுக்குழு கூட்டம் வரும் டிச. 1ல் நடக்கவுள்ளது. இதில், விரைவில் பதவிக்காலம் முடியவுள்ள தேர்வுக்குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சி.ஏ.சி.,) குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் படி பிரசாத்துக்குப் பதில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர், தமிழகத்தின் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இவருக்கு தமிழக கிரிக்கெட் சங்கம் கைகொடுக்க உள்ளது.

தெற்கு மண்டலத்தில் இருந்து அர்ஷத் அயூப், வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்டோரும் போட்டியில் இருப்பதாக தெரிகிறது.

மூலக்கதை