புதிய மாவட்டங்களுக்கு வருவாய் அலுவலர்கள் நியமனம்: தமிழக அரசு அரசாணை

தினகரன்  தினகரன்
புதிய மாவட்டங்களுக்கு வருவாய் அலுவலர்கள் நியமனம்: தமிழக அரசு அரசாணை

சென்னை: புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா, ராணிப்பேட்டை வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக பிரியாவும், தென்காசி வருவாய் அலுவலராக கல்பனாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக சங்கீதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மூலக்கதை