கொரிய மாஸ்டர்ஸ் சூப்பர் - 300 சாய்னா நேவால் திடீர் விலகல்: சையத் மோடி போட்டியில் தீவிர பயிற்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரிய மாஸ்டர்ஸ் சூப்பர்  300 சாய்னா நேவால் திடீர் விலகல்: சையத் மோடி போட்டியில் தீவிர பயிற்சி

குவான்ஜூ: கொரிய மாஸ்டர்ஸ் சூப்பர் - 300 பேட்மிண்டன் தொடர் இன்று தொடங்கி வருகிற 24ம் தேதி வரை தென் கொரியாவின் குவான்ஜூ நகரில் நடைபெறுகிறது. தொடருக்கான தகுதிச் சுற்றுப்போட்டிகள் இன்று தொடங்கும் நிலையில், இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால், திடீரென போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அடுத்த வாரம் லக்னோவில் தொடங்கும் சையத் மோடி சர்வதேச டூர் சூப்பர் 300 போட்டியில் கவனம் செலுத்துவதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளார். கொரியா தொடரிலிருந்து சாய்னா விலகியதால், இந்தத் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் இந்தியா சார்பில் ஒருவர் கூட பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.ஆனால், ஹாங்காங் ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிவரை முன்னேறிய இந்திய வீரர் கிதாம்பி காந்த், இந்தத் தொடரில் பங்கேற்கிறார். அவர், கொரியா மாஸ்டர்ஸ் தொடரின் முதல்சுற்றுப் போட்டியில் ஹாங்காங் வீரர் வாங் விங் கி வின்சென்ட்டை சந்திக்கிறார்.

முன்னதாக கிதாம்பி காந்த் இந்தியன் ஓபன் தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தார். இதேபோன்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் சமீர் வர்மா சீனாவின் ஷி யு குய்யை எதிர்கொள்கிறார்.

தகுதிச் சுற்றுப்போட்டியில் சமீர் வர்மா களமிறங்குகிறார்.

ஆனால், இந்தத் தொடரின் இரட்டையர் பிரிவுப் போட்டிகளில் ஒரு இந்திய ஜோடி கூட கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை