சையத் முஷ்டாக் அலி டி20: முரளி விஜய்க்கு கணுக்காலில் காயம்.. திடீர் விலகலால் பின்னடைவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சையத் முஷ்டாக் அலி டி20: முரளி விஜய்க்கு கணுக்காலில் காயம்.. திடீர் விலகலால் பின்னடைவு

சூரத்:  இந்திய அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி குரூப் பிரிவு, நடப்பு சீசனுக்கான சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தற்போது சூப்பர் லெக் சுற்றை எட்டிய அந்த அணி விளையாடிய ஏழு போட்டிகளில் ஆறு வெற்றி, ஒரு தோல்வி என 20 புள்ளிகளுடன் உள்ளது.

நாளை மறுநாள் சூரத்தில் உள்ள லால்பாய் கான்ட்ராக்டர் ஸ்டேடியத்தில் நடக்கும் (நவ. 21) சூப்பர் லெக் போட்டியில் தமிழ்நாடு அணி - பரோடா அணியுடன் மோதுகிறது.இந்நிலையில், தனது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தமிழ்நாடு அணியிலிருந்து முரளி விஜய் திடீரென விலகியுள்ளார். அவருக்கு பதிலாக எம். சித்தார்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நடப்பு சீசன் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் ஆறு போட்டிகளில் விளையாடிய முரளி விஜய், 174 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை