‘பளார்’ விட்ட வீரர் சஸ்பெண்ட்

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘பளார்’ விட்ட வீரர் சஸ்பெண்ட்

டாக்கா: வங்கதேசத்தில் நடக்கும் தேசிய கிரிக்கெட் லீக் போட்டியில் டாக்கா மண்டலம்-குல்னா மண்டலம் அணிகள் இடையிலான ஆட்டம் குல்னாவில் நடைபெற்று வருகிறது. டாக்கா மண்டல அணிக்காக விளையாடி வரும் வங்கதேச அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைன் (33), சக வீரர் அராபத் சன்னியை கோபத்தில் கன்னத்தில் பளார் விட்டார்.

பந்து வீச்சு திறமை குறித்து குறை கூறியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, வங்கதேச கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தி, ஷகாதத் ஹூசைனை உடனடியாக சஸ்பெண்ட் செய்தது.

அவருக்கு ஒரு ஆண்டு தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


.

மூலக்கதை