ஆட்டம் தொடங்கும் சில மணிநேரம் முன் ஆஸி. அணியின் ‘லைன் அப்’ லீக்: வீராங்கனைக்கு ஓராண்டு ஆட தடை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆட்டம் தொடங்கும் சில மணிநேரம் முன் ஆஸி. அணியின் ‘லைன் அப்’ லீக்: வீராங்கனைக்கு ஓராண்டு ஆட தடை

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடப்பு சீசனுக்கான மகளிர் பிக் பாஷ் டி20 தொடரில் அந்நாட்டு வீராங்கனையான விக்கெட் கீப்பர் எமிலி ஸ்மித் என்பவர் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த 2ம் தேதி ஹோபார்ட் ஹரிகேன்ஸ் - சிட்னி தண்டர்ஸ் மகளிர் அணிகளுக்கு இடையிலான டி20 லீக் போட்டி டாஸ்மேனியாவில் நடைபெற்றது.

இப்போட்டி தொடங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக, எமிலி ஸ்மித் தனது அணியின் ‘லைன் அப்’ (அணியின் ரகசிய திட்டமிடல்) குறித்த தகவல்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இதுபோன்று ‘லைன் அப்’ குறித்த தகவல்கள் வெளியிட்டது ஆஸ்திரேலியாவின் ஊழல் தடுப்புச் சட்டத்திற்கு எதிரானது.

அதனால், ரசிகர்கள் சூதாட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே, ஊழல் தடுப்பு சட்டத்தை மீறி நடந்துக்கொண்ட குற்றத்திற்காக கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிர்வாகம், எமிலி ஸ்மித்திற்கு ஓராண்டு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து, தற்போது பிக் பாஷ், 50 ஓவர் நேஷனல் கிரிக்கெட் லீக் தொடர்களிலிருந்தும் எமிலி ஸ்மித் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக டாஸ்மேனியாவைச் சேர்ந்த மற்றொரு விக்கெட் கீப்பர் வீராங்கனை எம்மா மனிக்ஸ், ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டார்.

ஆனால், ஹோபார்ட் ஹரிகேன்ஸ் - சிட்னி தண்டர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த போட்டி மழையால் ரத்தானது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை