கோத்தபய அதிபரான நிலையில் இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோத்தபய அதிபரான நிலையில் இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல்

கொழும்பு: இலங்கை அதிபராக கோத்தபய பதவியேற்ற நிலையில், அந்நாட்டில் வசிக்கும் தமிழர்கள் சிலர் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதால், அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையின் கேகல்லே மாவட்டத்தின் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் எட்டியந்தோட்டை பகுதியில் நேற்று பதற்றமான சூழல் காணப்பட்டது.

எட்டியந்தோட்டை கணேபல்ல தோட்டத்திற்குள் நுழைந்த மர்ம கும்பல், அங்குள்ள தமிழர்களின் வீடுகளை சேதப்படுத்தினர். அங்கிருந்த பெண்களிடம் அந்த கும்பல், யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து எட்டியந்தோட்டை காவல் நிலையத்தில் மக்கள் புகார் அளிக்கப்பட்டது. மது போதையில் சிலர் தகராறு செய்துள்ளதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.

தற்போது, கோத்தய ராஜபக்சே அதிபராக நேற்று பதவியேற்ற நிலையில் இந்தத்  தாக்குதல் நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை