யாருக்கு ஓட்டு?: தமிழர்கள் மீது தாக்குதல்

தினமலர்  தினமலர்
யாருக்கு ஓட்டு?: தமிழர்கள் மீது தாக்குதல்

கொழும்பு: இலங்கையில் சமீபத்தில் முடிந்த அதிபர் தேர்தலில் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என கேட்டு சில தமிழர்கள் மீது மர்மகும்பல் தாக்குதல் நடத்தியது. சில வீடுகள் சூறையாடப்பட்டன.
நேற்று முன்தினம் இலங்கை அதிபர் தேர்தல் நடந்தது. இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில், கோத்தபயாவுக்கு, குறைந்த ஓட்டுகளே கிடைத்தது. சிங்களர்கள் அமோகமாக ஆதரித்தனர்.
இந்நிலையில் கேகாலை மாவட்டம் யட்டியாந்தோட்டையில் மலைவாழ் தமிழர்கள் பகுதியில் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இங்கு வந்த சிலர், யாருக்கு ஓட்டு போட்டீர்கள் ? என்று கேட்டு தாக்கினர். சில வீடுகளும் சூறையாடப்பட்டன. போலீசார் விசாரித்து வருகின்றனர். மது போதையில் சிலர் தகராறு செய்துள்ளதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.மூலக்கதை