தமிழக தலைவர்கள் முதலைகண்ணீர்; ராஜபக்சே மகன் பாய்ச்சல்

தினமலர்  தினமலர்
தமிழக தலைவர்கள் முதலைகண்ணீர்; ராஜபக்சே மகன் பாய்ச்சல்

கொழும்பு: தமிழக அரசியல் தலைவர்கள் ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மகன் நாமல் விமர்சித்துள்ளார்.

இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் இளைய சகோதரரான கோத்தபயா ராஜபக்சே, 70, அபார வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட, ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதாசாவை விட, 13 லட்சம் ஓட்டுகள் அதிகம் பெற்று, அவர் வெற்றி பெற்றார். இவர் நேற்று (நவ.,18) அதிபராக பதவியேற்றார். இவரின் வெற்றிக்கு தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் எதிர் கருத்தை பதிவிட்டனர்.

இந்நிலையில், முன்னாள் அதிபர் ராஜபக்சே மகனும் எம்.பி.,யுமான நாமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசியல் தலைவர்களை கடுமையாக சாடினார். அந்த அறிக்கை: தமிழக அரசியல் தலைவர்கள், சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைக்க ஈழத்தமிழர்கள் மீது அக்கறை இருப்பதுபோல் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர். அதில் சிலர் சுயநலத்துடன் சந்தர்ப்பவாத அறிக்கைகளை விடுகின்றனர். அவர்கள், எம் மக்களுக்காக அரசியலை தவிர வேறென்ன ஆக்கபூர்வமான விஷயத்தை செய்திருக்கிறார்கள்?

திமுக - திருமாவளவன்

2009ல் யுத்தம் முடிந்ததும், திமுக.,வின் பாராளுமன்ற குழுவினர் இலங்கை வந்து, ராஜபக்சேவுடன் சிநேகமாக பழகினர். அதிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எங்களுடன் சிநேகமாக கலந்துரையாடி அனைத்தையும் அறிந்து கொண்டார். அத்தகையவர் இன்று சந்தர்ப்பவாத அறிக்கை விடுவது அதிர்ச்சியாக உள்ளது.
புதிய அதிபரை விமர்சிப்பதை விட்டுவிட்டு, நடைமுறை அரசியலில் இலங்கை தமிழ் மக்களை பற்றி சிந்திப்பது சிறந்தது. உளவுப்பூர்வமாக நேசித்தால் ஈழத்தமிழர்களின் எதிர்கால வாழ்வு சுபிட்சமாக அமைய பொறுப்புடன் செயல்படுங்கள். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

முழு அறிக்கை:

மூலக்கதை