அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள்: இந்தியாவுக்கு இரண்டாம் இடம்

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள்: இந்தியாவுக்கு இரண்டாம் இடம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கல்வி பயிலும், சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையில், சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்தாண்டு, 2 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள், அமெரிக்காவில் கல்வி பயில்வதாக, ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


அமெரிக்காவில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை குறித்து, அந்நாட்டை சேர்ந்த, 'சர்வதேச கல்வி பரிமாற்றம்' என்ற அமைப்பு, ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது.

அதன் விபரம்: அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தொடர்ந்து நான்காவது ஆண்டாக, 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள், இங்கு கல்வி கற்க தொடங்கி உள்ளனர். இந்த மாணவர்கள் மூலம், அமெரிக்க பொருளாதாரத்திற்கு, 3.2 லட்சம் கோடி நிதி கிடைத்துள்ளது. இது, கடந்த ஆண்டை காட்டிலும், 5.5 சதவீதம் அதிகம்.


அமெரிக்காவில் படிக்க, மாணவர்களை அனுப்பும் நாடுகளில், தொடர்ந்து 10வது ஆண்டாக, சீனா முதலிடம் வகிக்கிறது. 2018 - 19 கல்வியாண்டில், 3.69 லட்சம் சீன மாணவர்கள், இங்கு கல்வி பயில்கின்றனர். இந்த வரிசையில், இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்தியாவில் இருந்து, 2.02 லட்சம் மாணவர்கள், இங்கு படிக்கின்றனர். அமெரிக்காவின் சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையில், சீனா மற்றும் இந்திய மாணவர்கள், 50 சதவீத இடத்தை பிடித்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை