ஸ்டோக்சை சீண்டினாரா வார்னர் * ஆஸி., கேப்டன் பதிலடி | நவம்பர் 18, 2019

தினமலர்  தினமலர்
ஸ்டோக்சை சீண்டினாரா வார்னர் * ஆஸி., கேப்டன் பதிலடி | நவம்பர் 18, 2019

பிரிஸ்பேன்: ‘புத்தகம் விற்க வேண்டும் என்பதற்காக தேவையில்லாமல் வார்னரை சீண்டியுள்ளார் ஸ்டோக்ஸ்,’’ என ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பெய்ன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் ஹெடிங்லே டெஸ்டில், 135 ரன்கள் எடுத்து  வெற்றிக்கு கைகொடுத்தார். இதுகுறித்து தனது சுயசரிதை ‘ஆன் பயர்’ என்ற புத்தகத்தில்,‘‘ஆஸ்திரேலிய வீரர் வார்னர் நான் களத்தில் இருந்த போது பெரும்பாலான நேரம் என்னை துாண்டிக் கொண்டே இருந்தார். இது எனக்கு பெரும் தொல்லையாக இருந்தது,’’ என தெரிவித்தார்.

பந்தை சுரண்டி சிக்கிய வார்னர், ஒரு ஆண்டு தடைக்குப் பின் தற்போது எவ்வித பிரச்னையிலும் சிக்காமல் உள்ள நிலையில் ஸ்டோக்சின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய டெஸ்ட் அணி கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில்,‘‘ இங்கிலாந்து வீரர்களுக்கு இது வழக்கமான ஒன்று தான். புத்தகம் விற்க வேண்டும் என்பதற்காக தேவையில்லாமல் வார்னரை சீண்டியுள்ளனர். ஏனெனில் இவர் எனது அருகில் தான் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். அப்படி எதுவும் பேசவில்லை,’’ என்றார்.

மூலக்கதை