கோஹ்லியின் ‘ஸ்பெஷல்’ ஆட்டோகிராப் | நவம்பர் 18, 2019

தினமலர்  தினமலர்
கோஹ்லியின் ‘ஸ்பெஷல்’ ஆட்டோகிராப் | நவம்பர் 18, 2019

இந்துார்: இந்துார் டெஸ்ட் முடிந்ததும் ‘ஸ்பெஷல்’ ரசிகைக்கு ஆட்டோகிராப் வழங்கி மகிழ்வித்தார் கேப்டன் கோஹ்லி.

இந்தியா, வங்கதேச அணிகள் மோதிய முதல் டெஸ்ட் இந்துாரில் நடந்தது. இதில் இந்தியா இன்னிங்ஸ், 130 ரன்னில் வெற்றி பெற்றது. போட்டி முடிந்து மைதானத்தை விட்டு கிளம்பிய போது, அங்கு சேரில் உட்கார்ந்து வீரர்களுக்கு ‘பை பை’ காண்பித்து கொண்டிருந்தார் வளர்ச்சி குன்றிய பூஜா சர்மா 24, என்ற ‘ஸ்பெஷல்’ ரசிகை.

கோஹ்லி வந்ததும் அவரிடம் கையில் வைத்திருந்த தொப்பியை காண்பித்து ‘ஆட்டோகிராப்’ கேட்க, கோஹ்லி மகிழ்ச்சியுடன் வழங்கினார். இருவரும் போட்டோ எடுத்துக் கொண்டனர். தனது ‘ஹீரோவை’ சந்தித்த மகிழ்ச்சியில் உற்சாகமாக விடைபெற்றார் பூஜா. இந்த வீடியோ இணையதளங்களில் வெளியானது.

மூலக்கதை