கச்சத்தீவில் புனித அந்தோணியார் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. இலங்கை-இந்திய தமிழர்களின் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பாரம்பரியமாக நடைபெற்றும் இந்தத் திருவிழாவில், 7

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
கச்சத்தீவில் புனித அந்தோணியார் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. இலங்கைஇந்திய தமிழர்களின் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பாரம்பரியமாக நடைபெற்றும் இந்தத் திருவிழாவில், 7

கச்சத்தீவில் புனித அந்தோணியார் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது.

இலங்கை-இந்திய தமிழர்களின் உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பாரம்பரியமாக நடைபெற்றும் இந்தத் திருவிழாவில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து 110 விசைப்படகுகளில் சென்ற, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்றுள்ளனர். அதேபோல், இலங்கையில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு வருகை தந்துள்ளனர். முதல் நாளில் கூட்டுப்பிராத்தனையும், சிலுவைப் பாதை வழிபாடும் நடைபெற்றன. இதில் பங்கேற்ற பக்தர்கள் அமைதி வேண்டி இறைவழிபாடு நடத்தினர். அதுமட்டுமல்லாமல் கச்சத்தீவு திருவிழாவில் ஒன்று கூடிய தமிழர்கள், ஒருவரையொருவர் ஆரத்தழுவி நலம் விசாரித்தனர். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் சிறிதுகாலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்தோணியார் கோவில் திருவிழா, மீண்டும் 2010ம் ஆண்டில் இருந்து விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மூலக்கதை