வீடுகளில் பயன்படுத்தப்படாமல் உள்ள தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து…

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
வீடுகளில் பயன்படுத்தப்படாமல் உள்ள தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து…

வீடுகளில் பயன்படுத்தப்படாமல் உள்ள தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து வட்டி பெறும் திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உலக தங்க கவுன்சிலின் நிர்வாக இயக்குனர் சோமசுந்தரம் கூறுகையில் இத்திட்டம் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் வீடுகளில் இருந்தும் தனியாரிடம் இருந்தும் சந்தைகளுக்கு வரும் என்றும் இதன் மூலம் இந்தியாவின் பல லட்சம் குடும்பங்கள் பயனடையும் என்றும் தெரிவித்தார். தங்கம் டெபாசிட் திட்டம் தவிர தங்கத்தில் ஆவண வடிவில் முதலீடு செய்யும் முறையும் அறிமுகப்படுத்த உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். தங்கத்தின் விலைக்கு பத்திரத்தை விலைக்கு வாங்கலாம் என்றும் இதற்கு நிர்ணயிக்கப்பட்ட வட்டி வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அரசின் சார்பில் அசோக சக்கரம் பதித்த தங்க நாணயங்கள் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார். தங்கம் தொடர்பான இந்த புதிய அறிவிப்புகளை நகை வணிகத் துறையினர் வரவேற்றுள்ளனர். அரசின் முடிவால் தங்கத்தின் இறக்குமதி குறைய வாய்ப்புள்ளதாக அவர்கள் பாராட்டியுள்ளனர். அதே சமயம் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படாததற்கு அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ndaram

மூலக்கதை