நீச்சல் குளத்தில் கரடி ஆனந்த குளியல்

தினமலர்  தினமலர்
நீச்சல் குளத்தில் கரடி ஆனந்த குளியல்

சோபியா: பல்கேரியாவில் மலை மீது உள்ள ரிசார்ட்டில் நள்ளிரவில் நீச்சல்குளம் இருந்த பகுதியில் இருந்து வித்தியசமான ஒலி வந்ததாக கூறப்பட்டது. ரிசார்ட் நிர்வாகம் நீச்சல் குளம் அருகே இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்ட போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

நீச்சல் குளத்தில் பழுப்பு நிற கரடிகள் ஆனந்தமாக குளிக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத அந்த நீச்சல் குளத்தில் முதலில் இறங்க தயங்கிய அந்த கரடிகள் பின் ஜாலியாக ஆட்டம் போட்டுள்ளது. இந்த காட்சிகளை பார்த்த ரிசார்ட் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும் முடிவெடுத்துள்ளனர்.

மூலக்கதை