வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்தியா ஒரு இன்னிங்ஸ், 130 ரன் வித்தியாசத்தில் வெற்றி

தினகரன்  தினகரன்
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்தியா ஒரு இன்னிங்ஸ், 130 ரன் வித்தியாசத்தில் வெற்றி

போபால்: வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ், 130 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 150 ரங்களுக்கு சுருண்ட வங்கதேசம் இரண்டாவது இன்னிங்சில் 213 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 2வது இன்னிங்சில் வங்கதேசம் தரப்பில் அதிகபட்சமாக முஸ்பிகுர் மெஹிதி ஹாசன் 38, லிட்டன் தாஸ் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய தரப்பில் ஹமி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்; அஸ்வின் 3, உமேஷ் யாதவ் 2, இஷாந்த் சர்மா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். முதல் இன்னிங்சில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 493 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்திருந்தது.

மூலக்கதை