அமெரிக்காவில் அட்டூழியம் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்காவில் அட்டூழியம் மருத்துவமனையில் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி

சிகாகோ: அமெரிக்காவில் மர்ம ஆசாமி நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள மருத்துவமனைக்கு நேற்று மாலை வந்த மர்ம ஆசாமி திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான்.

இதனால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். துப்பாக்கி சூட்டில் பெண் டாக்டர் ஒருவர் அதே இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார், மர்ம ஆசாமியை பிடிக்க முயன்றனர். அப்போது ஆசாமி சுட்டதில் போலீஸ் அதிகாரி மற்றும் மருத்துவமனை ஊழியர் ஆகியோர் உயிரிழந்தனர்.

 

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தார். உயிரிழந்த பெண் டாக்டர், மர்ம நபரின் முன்னாள் காதலி என கூறப்படுகிறது.

இவர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன.

இதுகுறித்து அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தபோதிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

.

மூலக்கதை