உலகக் கோப்பை கிரிக்கெட்: மெக்கல்லம் சாதனை

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
உலகக் கோப்பை கிரிக்கெட்: மெக்கல்லம் சாதனை

உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், 18 பந்துகளில் மெக்கல்லம் 50 ரன்களைக் கடந்தார். இதன் மூலம் 2007ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில், கனடாவுக்கு எதிரான போட்டியில் 20 பந்துகளில் அரைசதம் அடித்திருந்த, தனது முந்தைய சாதனையை அவர் முறியடித்தார். 7 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் விளாசிய மெக்கல்லம், 77 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 

மூலக்கதை