உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கணிப்புகள்: கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கணிப்புகள்: கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் முடிவுகள் முன்னரே முடிவு செய்யப்பட்டதாகவும், அரை இறுதியில் இந்திய அணி தோல்வியடையும் என்ற வாட்ச் அப் கணிப்புகளால் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

 

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியஅணி முதல் போட்டியில் பாகிஸ்தானை வெற்றி கண்டது. நாளை நடைபெறும் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இந்த நிலையில் அரை இறுதிப் போட்டியில் இந்தியஅணி தோல்வியை தழுவும் என வாட்ச் ஆப்பில் செய்தி பரவி வருகிறது. இந்த உலகக் கோப்பை போட்டி முடிவுகள் முன்னரே பிக்ஸ் செய்யப்பட்டு விட்டதாகவும் , தற்போதைய சாம்பியனான இந்தியாவுக்கு கோப்பை கிடைக்க வாய்பில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்க அணிதான் பட்டம் வெல்லும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி அனைத்து போட்டிகளின் முடிவும் மிக துல்லியமாக கணிக்கப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் அனைத்தும் இந்த வாட்ச் அப் தகவல்படி உண்மையாக நடைபெற்றுள்ளது.

மூலக்கதை