ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட்: வலுவான நிலையில் தமிழக அணி

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட்: வலுவான நிலையில் தமிழக அணி

ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட்டில் விதர்பா அணிக்கு எதிரான காலிறுதியாட்டத்தில் தமிழக அணி, வலுவான நிலையில் உள்ளது. ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தமிழக அணி 403 ரன்களும், விதர்பா அணி 259 ரன்களும் எடுத்தன. இதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தமிழக அணி நான்காம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் 337 ரன்கள் முன்னிலையுடன் தமிழக அணி உள்ளது.

மூலக்கதை