இலங்கை புதிய அரசின் முயற்சிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
இலங்கை புதிய அரசின் முயற்சிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கண்டனம்

இலங்கையின் புதிய அரசை பலப்படுத்துவதற்காக, மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை வெளிவருவதை தள்ளிப்போட்டிருந்தால், அதனை வன்மையாக கண்டிப்பதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதனிடையே இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கை தாமதமாவது வருத்தம் அளிப்பதாக இலங்கை எம்பி சுமந்திரன் கூறியுள்ளார்.

மூலக்கதை