இலங்கையில் இந்திய பத்திரிகை இதழுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
இலங்கையில் இந்திய பத்திரிகை இதழுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

இலங்கையில், இந்திய பத்திரிகை இதழுக்கு சுங்கத்துறை விதித்திருந்த தடையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே நீக்கியுள்ளார்.

 

FRONTLINE ஆங்கில இதழின் 30ஆவது ஆண்டு சிறப்பிதழை இலங்கையில் விநியோகிக்க அந்நாட்டு சுங்கத்துறையினர் கடந்த வாரம் தடை விதித்திருந்தனர். அந்த இதழில், விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் 1987ஆம் ஆண்டு அளித்த நேர்காணல் கட்டுரை இடம்பெற்றதால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கருதி இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, FRONTLINE ஆங்கில இதழை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார். ஊடக அமைச்சகத்தின் கருத்தைக் கேட்காமல் எதிர்காலத்தில் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் என்றும் இலங்கை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் அறிவுறுத்தியுள்ளார்.

மூலக்கதை