சிறிசேன திருப்பதி சென்றபோது குழப்பம்: தங்கவாசல் சாவி உடைந்தது

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
சிறிசேன திருப்பதி சென்றபோது குழப்பம்: தங்கவாசல் சாவி உடைந்தது

திருப்பதி கோவிலில், சுப்ரபாதம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இலங்கை அதிபர் சிறிசேன சென்றபோது, தங்கவாசலைத் திறக்கமுடியாமல் சாவி உடைந்ததால், சிறிது நேரம் குழப்பம் நிலவியது.

 

அதிகாலை 2.30 மணி அளவில் நடைபெற்ற சுப்ரபாத நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மனைவியுடன் சென்ற சிறிசேனவை தங்க வாசல் வழியாக அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், தங்கவாசலைத் திறக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக அதன் சாவி உடைந்தது. பின்னர் சிறிசேன தம்பதியை, பொதுவழியில் அழைத்துச் சென்றனர். தங்கவாசல் பூட்டும், சாவியும் உடனடியாக சரிசெய்யப்பட்டு விட்டதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை