மோசுல் நகரை மீட்க தயார் நிலையில் ஈராக், குர்து கூட்டுப்படை: அமெரிக்க ராணுவ அதிகாரி தகவல்

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
மோசுல் நகரை மீட்க தயார் நிலையில் ஈராக், குர்து கூட்டுப்படை: அமெரிக்க ராணுவ அதிகாரி தகவல்

இஸ்லாமிக் ஸ்டேட் ஆயுதக்குழுவினர் வசம் உள்ள மோசுல் நகரை மீட்கும் நடவடிக்கைகளுக்கு ஈராக் மற்றும் குர்து கூட்டுப்படையினர் தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்க ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

கூட்டுப்படையைச் சேர்ந்த 25ஆயிரம் வீரர்கள் இந்நகரை மீட்க ஏப்ரல் அல்லது மேயில் தங்கள் தாக்குதலைத் தொடங்குவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடுமையான பயிற்சிகளுக்குப் பின் தயாராகியுள்ள இப்படையுடன், ஆலோசனை வழங்கும் பொருட்டு சிறிய அளவிலான அமெரிக்க ராணுவ அதிகாரிகள் குழு செல்ல வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகளின் தாக்குதல்களை அடுத்து குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஈராக் பிரதமர் அபாதி, மோசுலை மீட்டெடுக்கும் விதத்திலான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என்றும் சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

மூலக்கதை