உக்ரைனில் சண்டை நிறுத்தத்தால் அமைதி திரும்ப வாய்ப்பு

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
உக்ரைனில் சண்டை நிறுத்தத்தால் அமைதி திரும்ப வாய்ப்பு

உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அரசு மற்றும் கிளர்ச்சியாளர்கள் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் டெபால்ஸ்டேவ் நகரில் மட்டும் தொடர்ந்து மோதல் நீடித்து வருவதாக சண்டை நிறுத்தத்தை கண்காணித்து வரும் ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பிற்கான அமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த நகரை தாங்கள் சுற்றி வளைத்துள்ளதாகவும், இது தங்கள் பகுதி என்றும் கூறி வரும் கிளர்ச்சியாளர்கள், கண்காணிப்பு அமைப்பினர் நகருக்குள் நுழைய அனுமதி மறுப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூலக்கதை